‘கோட்டா கோ கம’ போராட்ட களத்திற்கு தபாலில் வந்த கடிதம்
4 view
காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள போராட்ட களத்திற்கு இலங்கை தபால் திணைக்களத்தின் ஊடாக கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடித உறையில் முகவரியாக கோட்டா கோ, காலிமுகத் திடல் போராட்ட களம், கொழும்பு 1 என அச்சிடப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். கடிதத்தை தபால்காரர் ஒருவர் எடுத்துச் சென்று அங்குள்ளவர்களிடம் வழங்கியுள்ளார். கோட்டா கோ கம போராட்ட களத்தின் ஒருங்கிணைப்பு குழுவிற்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், எங்கிருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகவில்லை. கோட்டா கோ கம முகவரிக்கு வந்த கடிதம்(Photos) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத் திடலில் ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நடத்தப்படும் இடத்திற்கு கோட்டா கோ கம என பெயரிட்டு, கூகுள் உலக வரைப்படத்திலும் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post ‘கோட்டா கோ கம’ போராட்ட களத்திற்கு தபாலில் வந்த கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘கோட்டா கோ கம’ போராட்ட களத்திற்கு தபாலில் வந்த கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
