அரசியல் நாடகங்களை அரங்கேற்றாமல் 13 ஆவது தீர்வை பாதுகாக்கவும்! சஜித்

5 view
சர்வதேசத்தைத் திருப்திப்படுத்த 13 பிளஸ் , உள்நாட்டில் அரசில் இருப்பைத் தக்க வைக்க 13 மைனஸ் எனவும் கூறி அரசியல் நாடகங்களை அரங்கேற்றாமல், 13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக வழங்கப்பட்ட அரசியல் தீர்வைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “முப்பது வருடகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பெரும் பங்காற்றிய படையினரை இந்நாளில் நினைவுகூருகின்றேன். அதேபோல் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் கருத்துகளையும் பெறப்பட்டு உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 13 பிளஸ் எனவும், 13 மைனஸ் எனவும் அரசியல் நாடகமாடாமல், 13 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக வழங்கப்பட்ட தீர்வைப் பாதுகாக்க வேண்டும். மே – 09 ஆம் திகதி நடைபெற்ற சம்பவங்களை நாம் கண்டிக்கின்றோம். வன்முறையுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.…
The post அரசியல் நாடகங்களை அரங்கேற்றாமல் 13 ஆவது தீர்வை பாதுகாக்கவும்! சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース