டான் பிரியசாத் கைது
5 view
காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, மொரட்டுவ நகரசபை தலைவர் சமன் லால் பெர்னாண்டோ / சீதாவகபுர பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன மற்றும் களனி பிரதேச சபை உறுப்பினர்களான மஞ்சுள பிரசன்ன ஆகியோரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இதேவேளை, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். நேற்று அதிகாலை 1 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து அவர் வெளியேறியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.- Vidivelli
The post டான் பிரியசாத் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டான் பிரியசாத் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
