தமிழ் தேசிய அரசியல் சக்திகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் – எம்.வினோராஜ்
45 view
வடகிழக்கில் உள்ள தமிழ் தேசிய அரசியல் சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டு தமிழர்களின் விடுதலைக்காக பயனிப்பதே முள்ளிவாய்க்கால்போன்ற இன அழிப்பில் ஆகுதியாகியவர்களுக்கு செய்யும் கைமாறு என மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் எம்.வினோராஜ் தெரிவித்தார். வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில் களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் அன்னதான நிகழ்வொன்றும் நேற்று (புதன்கிழமை) ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் செயலாளர் சதீஷனின் ஒருங்கிணைப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் கே.வினோராஜ் மற்றும் வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைசெய்யப்பட்ட ஆத்மாக்களின் சாந்தி வேண்டி விசேட பூஜையில் கலந்து கொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் எம்.வினோராஜ், ”உலகெங்கும் வாழும் தமிழர்களின் நீங்காத,அழிக்கமுடியாத நினைவுகளை இன்றைய தினம் கொண்டுள்ளது.இந்த நாட்டில் சுதந்திரத்திற்காக…
The post தமிழ் தேசிய அரசியல் சக்திகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் – எம்.வினோராஜ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் தேசிய அரசியல் சக்திகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் – எம்.வினோராஜ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
