ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை இல்லை – சஜித்
15 view
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையின் கீழ் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்க எவருக்கும் உரிமை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், “இதுவரை ஊடக சுதந்திரம் இருந்தது. நாங்கள் அனைவரும் கமிட்டி அறைகளில் இருந்து வெளியே வந்து ஊடக அறிக்கைகளை கொடுத்துள்ளோம். என்னிடம் ஆதாரம் உள்ளது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊடகவியலாளர்களிடமிருந்து தொலைபேசிகளை பறிப்பதற்கு எந்த உரிமையும் இல்லை. நீங்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சுற்றறிக்கைகளில் ஒன்றைக் காட்டி இதை மறைக்க வேண்டாம். இது முற்றிலும் தவறானது. தேவைப்பட்டால் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபைக்கு வந்து மன்னிப்பு கேட்டு இதை முடித்துக்கொள்ளலாம். எனவே, ஊடகவியலாளர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் கைகளைத் தொட எவருக்கும் உரிமை இல்லை என நான் கோருகின்றேன். ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை. பிரதமருக்கு உரிமை இல்லை. எதிர்க்கட்சித் தலைவருக்குக் கூட உரிமை இல்லை.…
The post ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை இல்லை – சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை இல்லை – சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
