தமிழ் இனப்படுகொலையை கனடா ஏற்று அங்கீகரித்தமை மிக முக்கிய நிகழ்வு: ஹரி ஆனந்தசங்கரி
16 view
கனடா, மே 19 இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை என கனடா பாராளுமன்றம் ஏற்று, அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றிய நாள் தமிழ் சமூகத்தின் வரலாற்றில் மிக முக்கிய நாட்களில் ஒன்று என கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இனப்படுகொலை தீர்மானத்தை கனடா பாராளுமன்றம் நேற்று ஏகமனதாக ஏற்று அங்கீகரித்தது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே-18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக கனடா பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டது.இந்நிலையில் பிரேரணை நிறைவேற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஹரி ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு தெரிவித்தார். கனடாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகத்தின் வரலாற்றில் இது மிகவும் முக்கிய நாள் என்று அவர் கூறினார்.கனடா பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தமிழ் மக்களின் இனப்படுகொலையை அங்கீகரிப்பதுடன், மே-18 ஐதமிழ் இனப்படுகொலை நினைவு தினமாகவும் அங்கீகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். உலகில் பாராளுமன்றம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றது தமிழ் இனப்படுகொலை என…
The post தமிழ் இனப்படுகொலையை கனடா ஏற்று அங்கீகரித்தமை மிக முக்கிய நிகழ்வு: ஹரி ஆனந்தசங்கரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் இனப்படுகொலையை கனடா ஏற்று அங்கீகரித்தமை மிக முக்கிய நிகழ்வு: ஹரி ஆனந்தசங்கரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
