பிரதமர் அலுவலகத்தின் மாதாந்த செலவினை குறைத்த ரணில்
44 view
கொழும்பு,மே 18 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பிரதமர் அலுவலகத்தினுடைய மாதாந்த சராசரி செலவான 120 மில்லியன் ரூபாவை, 60 மில்லியன் ரூபாவாக குறைத்துள்ளதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதம அலுவலகம் சராசரியாக 120 மில்லியன் ரூபாவை மாதாந்தம் செலவு செய்ததாகவும், ஆனால் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றவுடன் மாதாந்த செலவுகளை 60 மில்லியன் ரூபாவாகக் குறைத்ததாகவும் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விக்கிரமசிங்க ரணில் இன்னும் பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்குச் செல்லவில்லை. தற்போது அவர் ஃப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் கடமைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
The post பிரதமர் அலுவலகத்தின் மாதாந்த செலவினை குறைத்த ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதமர் அலுவலகத்தின் மாதாந்த செலவினை குறைத்த ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
