இராணுவ அதிகாரிகளின் பதவி உயர்வு குறித்து வெளியான தகவல்
52 view
கொழும்பு,மே 18 நாட்டில் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இராணுவத்தின் 396 அதிகாரிகள் அடுத்த நிலைக்கு பதவிய உயர்த்தப்பட்டுள்ளனர். மேலும், 8 ஆயிரத்து 110 இராணுவ வீரர்களும் அடுத்த நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இதேபோன்று, விமானப்படை அதிகாரிகள் 450 பேர் அடுத்த நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளன.விமானப்படை தளபதி எயார் மார்ச்ல் சுதர்சன பத்திரனவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், 3 ஆயிரத்து 361 விமானப்படை விரர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கபட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு, காலி உள்ளிட்ட பல நகரங்களில் புதன்கிழமை யுத்த நிறைவு நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post இராணுவ அதிகாரிகளின் பதவி உயர்வு குறித்து வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இராணுவ அதிகாரிகளின் பதவி உயர்வு குறித்து வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
