அனைத்து வகையான எரிபொருளும் விலைகளும் அதிகரிக்கும்: அசோக் அபேசிங்க
45 view
கொழும்பு, மே 18 எதிர்காலத்தில் அனைத்து வகையான எரிபொருட்களும் ரூ. 400-500 வரை அதிகரிக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் இன்னும் ஒரு மாதத்திற்கு எரிபொருள் இருப்பு இருக்கும் அதேவேளை அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். டொலர் மதிப்பு ரூ.400-ஐ தாண்டும், ஒரு கிலோ பருப்பு ரூ.700-800-க்கும், ஒரு இறாத்தல் பாண் ரூ.200-250-க்கும் விற்பனைச் செய்யப்படும் என்றும், குடிமக்கள் மூன்று வேளை உணவு சாப்பிட முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் தோல்வியடைந்த அரசாங்கமும் தலைவரும் இருப்பதாகவும், இவ்வாறான சூழ்நிலையில் சர்வதேச நிறுவனங்கள் இலங்கைக்கு நிதியளிப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஒருமித்த அரசாங்கம் தேவை என்றும், அத்தகைய அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்தி…
The post அனைத்து வகையான எரிபொருளும் விலைகளும் அதிகரிக்கும்: அசோக் அபேசிங்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனைத்து வகையான எரிபொருளும் விலைகளும் அதிகரிக்கும்: அசோக் அபேசிங்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
