ஆர்ப்பாட்டக்காரர்களால் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன
5 view
நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்களை வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக 170 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தாக்குதல், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அவர்களில் 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களினால் காலி…
The post ஆர்ப்பாட்டக்காரர்களால் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆர்ப்பாட்டக்காரர்களால் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
