மே பதினெட்டு: ரணில் நினைவுகூர்த்தலைத் தடுப்பாரா? நிலாந்தன்.
41 view
மே 18 இம்முறை மிகவும் வித்தியாசமான ஒரு சூழலுக்குள் வருகிறது. எந்த மே மாதம் ராஜபக்சக்கள் நாட்டை சிங்கள மக்களுக்கு வென்று கொடுத்ததாக பிரகடனப்படுத்தினார்களோ, அதே மே மாதம் அவர்களை சிங்கள மக்களை அவர்களுடைய சொந்த தேர்தல் தொகுதிகளில் இருந்து துரத்தியிருக்கிறார்கள். இப்பொழுது மஹிந்த ராஜபக்ச நாட்டின் வடக்குக் கிழக்கில் எங்கேயோ ஒரு படைத் தளத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாக கருதப்படுகிறது.அவர்கள் பாதுகாத்து கொடுத்த தேசமே அவர்களை ஓட ஓட விரட்டுகிறது. அவர்கள் எங்கேயும் தப்பி விடக்கூடாது என்பதற்காக அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி விடாமல் இருக்க நீதிமன்றங்களில் தடையுத்தரவை வாங்கி வைத்திருக்கிறது. இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் முன்னெப்பொழுதும் இடம்பெற்றிராத சம்பவங்கள் கடந்த சுமார் 45 நாட்களுக்கு மேலாக நடந்துவருகின்றன. மார்ச் மாதம் 31 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன் தொடங்கிய ஆர்ப்பாட்டம் அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டது. அதன் விளைவாக கோட்டாபயவை தவிர ஏனைய எல்லா ராஜபக்சக்களும் பதவி விலகிவிட்டார்கள்.…
The post மே பதினெட்டு: ரணில் நினைவுகூர்த்தலைத் தடுப்பாரா? நிலாந்தன். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மே பதினெட்டு: ரணில் நினைவுகூர்த்தலைத் தடுப்பாரா? நிலாந்தன். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
