யாழிலும் கலவரத்தை ஏற்படுத்த முனைகிறார்கள்: அங்கஜன் இராமநாதன்

4 view
யாழ்ப்பாணம்,மே 10 யாழிலும் கலவரத்தை ஏற்படுத்த முனைகிறார்கள். தமது அரசியல் தேவைக்காக உசுப்பேற்றுபவர்கள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். இங்கு வன்முறைகள் இடம்பெற்றால் பாதிக்கப்படுவது எங்கள் மக்களே. நிதானித்து சிந்தித்து செயற்படுங்கள் என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயிலுள்ள தனது பதாகைக்கு தீ வைக்கப்பட்டதையொட்டி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில், யாழில் எனது அலுவலகம் எரிக்கப்பட்டது என பரவும் தகவல்கள் தவறானவை என்பதோடு, அலுவலக பதாதையிலும் சிறு பகுதி மாத்திரமே வன்முறையை தூண்டும் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது. இச்செயலூடாக யாழில் வன்முறையை தூண்டி குளிர்காய நினைப்பவர்கள் தமது அரசியல் கோழைத்தனத்தை கைவிட வேண்டும். வரலாறு சொல்லும் தமிழர் வீரங்கள் இந்த கோழைத்தனத்தை ஏற்றுக்கொள்ளாது. நாட்டில் அமைதிவழி போராட்டங்களில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளை நாம் கண்டித்துள்ள நிலையில் எம்மீது தாக்குதல் நடாத்தி…
The post யாழிலும் கலவரத்தை ஏற்படுத்த முனைகிறார்கள்: அங்கஜன் இராமநாதன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース