மின்தடை காரணமாக பொருளாதாரத்தில் எந்தளவு நட்டம்? சஜித் கேள்வி
13 view
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் வறுமையில் வாடியுள்ளனர் என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய தினம் (5) பாராளுமன்ற அமர்வில் கட்டளை நியதிகள் சட்டம் 27/2 கீழ் அரசாங்கத்திடம் கேள்விகளை முன்வைக்கும் போதே அவர் இந்தக் கேள்வியையும் எழுப்பியுள்ளார். இதன்போது அவர், இன்று நாட்டில் வேலையின்மை விகிதம் என்ன? கடந்த 2 ஆண்டுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் வறுமையில் வாடியுள்ளனர்? மார்ச் 2022க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது நாட்டின் மொத்த கடன் சுமை என்ன? 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது எவ்வளவு தொகை அதிகமாகும்? தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அதிக வருமானம் ஈட்டுவோருக்கு வரிச்சலுகை வழங்கியதன் மூலம் அரச வருவாய் எவ்வளவால் குறைந்துள்ளது. மேற்கண்ட வரிச் சலுகையால் நேரடி மற்றும் மறைமுக வரி செலுத்துவோர் தொகை எவ்வளவால் குறைவுக்குட்பட்டுள்ளன,…
The post மின்தடை காரணமாக பொருளாதாரத்தில் எந்தளவு நட்டம்? சஜித் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின்தடை காரணமாக பொருளாதாரத்தில் எந்தளவு நட்டம்? சஜித் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
