வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களுக்கான மின்வெட்டு அறிவிப்பு
14 view
கொழும்பு,மே 05 வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை வரை நாளாந்தம் 3 மணிநேரமும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A முதல் L வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணிநேரமும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் நாளாந்தம் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், கொழும்பு முன்னுரிமை பகுதிகளுக்கு (CC) மேற்படி காலப்பகுதியினுள் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணிநேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்சார கேள்வி முகாமைத்துவ அட்டவணை
The post வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களுக்கான மின்வெட்டு அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களுக்கான மின்வெட்டு அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
