தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு! கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கம்
5 view
நாடளாவிய ரீதியிலான அரசாங்கத்திற்கு எதிராக நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுடனான பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கமும் ஆதரவு நல்குவதாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.கபீர் தெரிவித்தார். இதன்படி நாடளாவிய ரீதியில் நாளைய தினம் ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த நிலையில் கல்முனை வர்த்தக சங்கமும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிலாளர் சங்கத்தின் தலைவரால் எமது சங்கத்திற்கு 6.5.2022 அன்று ஹர்த்தாலை அனுஸ்டிக்கும் படி விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கமைய இன்று (5) எமது கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கமானது ஒன்று கூடி ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. குறித்த தீர்மானத்திற்கமைய நாளை (6) எமது பொதுச்சந்தை முற்றாக மூடப்பட்டு ஹர்த்தாலுக்கு முழு ஆதரவு வழங்கப்பட தீர்மானித்துள்ளது என தெரிவிக்க விரும்புகின்றேன் என்றார். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு அமைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகாத நிலையில் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தொடர்…
The post தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு! கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு! கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
