எதிர்கால சந்ததியின் கல்வி அழியும் அபாயம்;விடுக்கப்பட்ட எச்சரிக்கை.
4 view
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி அனைத்தும் ஒருமித்து இந்த நாட்டின் எதிர்கால சிற்பிகளான பாடசாலைக் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி அனைத்தும் ஒருமித்து இந்த நாட்டின் எதிர்கால சிற்பிகளான பாடசாலைக் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றது. நாளுக்கு நாள் பசி பட்டனி மற்றும் போக்குவரத்து இடர்ப்பாடு காரணமாக மாணவர்களின் வரவில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது. பாடசாலை நேரங்களில் மாணவர்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்காக அந்த மாணவர்களிடம் கேள்வி கேட்க எவராலும் முடியாது. இப்போது அரசாங்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள போராட்டமானது அனைத்துத் துறைகளையும் முடக்கி வருகிறது. இது எமது எதிர்கால சந்ததியாகிய குழந்தைகளையே பெரிதும் பாதிக்கின்றது. இவர்களின் கல்வி நடவடிக்கைகள்…
The post எதிர்கால சந்ததியின் கல்வி அழியும் அபாயம்;விடுக்கப்பட்ட எச்சரிக்கை. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எதிர்கால சந்ததியின் கல்வி அழியும் அபாயம்;விடுக்கப்பட்ட எச்சரிக்கை. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
