ஜப்பான் பிரதமருடனான சந்திப்பின் போது ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்க பிரதமர் தீர்மானம்!
5 view
பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா இன்று (வியாழக்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு சந்திப்பின் போது, இருதலைவர்களும் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய பாதுகாப்பு கூட்டாண்மைக்கு உடன்பட உள்ளனர். பரஸ்பர அணுகல் ஒப்பந்தம், பிரித்தானிய மற்றும் ஜப்பானியப் படைகளின் பயிற்சி, கூட்டுப் பயிற்சிகள் மற்றும் பேரிடர் நிவாரணங்களுக்காக ஒன்றாக ஈடுபடுதல் போன்ற விடயங்கள் குறித்தும் விவாதிக்கவுள்ளனர். இந்த ஒப்பந்தம் இந்தோ-பசிபிக் மீதான பிரித்தானியாவின் உறுதிப்பாட்டை அதிகரிக்கும் என்று டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. மேலும், ஐரோப்பிய நாட்டுடன் கையெழுத்திட்ட முதல் சந்தர்ப்பமாகும். இது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஒருங்கிணைந்த மதிப்பாய்வைப் பின்பற்றுகிறது. டவுனிங் ஸ்ட்ரீட் சந்திப்பின் மையங்களில் ஒன்று ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பது மற்றும் அதன் எண்ணெய் மற்றும் எரிவாயுவை நம்பியிருக்கக் கூடிய நட்பு நாடுகளுக்கு எவ்வாறு உதவுவது என்பதில் இருக்கும். ஜி7 நாடுகளின்…
The post ஜப்பான் பிரதமருடனான சந்திப்பின் போது ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்க பிரதமர் தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜப்பான் பிரதமருடனான சந்திப்பின் போது ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்க பிரதமர் தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
