சபாநாயகரின் அறிவிப்பினால் பிரதி சபாநாயகர் தெரிவில் குழப்பம்!

15 view
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அறிவிப்பு காரணமாக புதிய பிரதி சபாநாயகர் தெரிவில் குழப்பநிலை ஏற்பட்டிருந்ததுடன், அமைதியின்மையும் ஏற்பட்டிருந்தது. கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்மொழியப்பட்டதுடன், சுசில் பிரேமஜயந்தவினால் வழிமொழியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அறிவித்திருந்தார். அதேநேரம், பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார முன்மொழிந்திருந்த நிலையில், லக்ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்திருந்தார். இதனையடுத்து, பிரதி சபாநாயகர் பதவிக்கு இரு வேட்புமனு தாக்கல் செய்தமையால் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சபாநாயகர் அறிவித்தார். குறிப்பாக வாக்களிக்கும் போது, வாக்களிக்கும் நபரின் பெயரை குறிப்பிட்டு வாக்குச்சீட்டில் தங்களது கையொப்பத்தினையிட வேண்டும் என சபாநாயகர் குறிப்பிட்டார். இதற்கு எதிர்கட்சியினர் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர். குறிப்பாக ஆளும்…
The post சபாநாயகரின் அறிவிப்பினால் பிரதி சபாநாயகர் தெரிவில் குழப்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース