மண்டபம் அகதிகள் முகாம் வாசல் முன் ஈழத்தமிழ் பெண் தர்ணா போராட்டம்!
5 view
ஈழத்தமிழ் பெண் ஒருவர் மண்டபம் அகதிகள் முகாம் வாசல் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். வவுனியாவிலிருந்து கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அகதியாக வந்த ராசிய பேகம் என்பவரின் குடும்பத்தினர் வசித்து வரும் வீடு முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் பக்கத்தில் உள்ள வீட்டை சொந்த செலவில் புனரமைத்து வாழ்ந்து வருகின்றனர். அந்த வீட்டை நேற்று வந்த ஐந்து இலங்கை தமிழர்களுக்கு ஒதுக்கி இவரை குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் இருந்த பொருட்களை அகற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண் மண்டபம் அகதிகள் மறு வாழ்வு முகாம் வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். மேலும் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாம் தனி ஆட்சியர் தொடர்ந்து, இலங்கை முகாம்களில் வசிக்கும் மக்களிடம் லஞ்சம் கேட்பதாகவும், பணம் தராததால் முன்விரோதம் காரணமாக தங்களை அந்த வீட்டை விட்டு காலி செய்து வெளியே அனுப்பி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.…
The post மண்டபம் அகதிகள் முகாம் வாசல் முன் ஈழத்தமிழ் பெண் தர்ணா போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மண்டபம் அகதிகள் முகாம் வாசல் முன் ஈழத்தமிழ் பெண் தர்ணா போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
