பிரதமராக யார் வந்தாலும் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை: சுமந்திரன்
13 view
யாழ், மே 02 தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் யார் புதிய பிரதமராக வந்தாலும் நாட்டில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் அவர் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது யார் பிரதமராக வந்தால் நாட்டில் மாற்றம் ஏற்படலாம் என நீங்கள் கருதுகிறீர்கள் என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியபோதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்பொழுது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை காணப்படுகின்றது. பிரதமரை மாற்ற வேண்டும் என்று ஒரு குழு விடாப்பிடியாக நிற்கின்றார்கள். எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளது தற்போதைய பிரதமர் பதவி விலகினால் புதியவர் பிரதமராக வருவார். அவடன் ஒரு புதிய அமைச்சரவை உருவாகும். அந்த அமைச்சரவையை உருவாக்குவதற்கு ஐவர் கொண்ட குழுவினை உருவாக்கியுள்ளார்கள். அந்த ஐவர் கொண்ட குழுவில் உள்ளோரில் எமக்கு திருப்தியில்லை.…
The post பிரதமராக யார் வந்தாலும் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை: சுமந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதமராக யார் வந்தாலும் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை: சுமந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
