ஜனாதிபதியின் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி: அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மீண்டும் அழைப்பு
4 view
கொழும்பு,மே 30 நாடு எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகொள்வதற்கு மக்கள் சார்பாக இணக்கப்பாட்டுக்கு வருமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, உழைக்கும் மக்கள் சார்பான புரட்சிகர மாற்றத்துடன் போராட்டத்தை நேர்மறையான திசையில் வழிநடத்த ஒன்றிணையுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். உலக உழைக்கும் சமூகம் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில் சர்வதேச தொழிலாளர் தினம் வருகிறதென தெரிவித்த ஜனாதிபதி, கடந்த மூன்று ஆண்டுகளில், நாட்டில் மிகக் கடுமையான சவால்களை எதிர்கொண்ட குழு, தொழிலாளி வர்க்கம்தான் என தெரிவித்துள்ளார்.இந்தச் சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு ஸ்திரத்தன்மையுடன் இருந்து தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த பெரும் அர்ப்பணிப்புகளைச் செய்தவர்களும் அவர்களே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாளுக்கு நாள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இன்று இன்னும் தீவிரமானவை…
The post ஜனாதிபதியின் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி: அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மீண்டும் அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதியின் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி: அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மீண்டும் அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
