அரசியல் கட்சிகளால் நாடளாவிய ரீதியில் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு
4 view
உழைக்கும் வர்க்கத்தை நினைவு கூறும் தினமாகவும் கௌரவப்படுத்தும் தினமாகவும் காணப்படும் உலக தொழிலாளர் தினமானது, தொழிலாளர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அநீதிகளுக்கு எதிராக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்து ஆரம்பமானது. இலங்கையில் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகளால் நாடளாவிய ரீதியில் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவின் கூட்டம் கட்சி தலைவரான பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்குபற்றலின்றி இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமனவின் மே தின கூட்டம் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை காலை நுகேகொடையில் இடம்பெறவுள்ளது. மே தின கூட்டத்தை காலி முகத்திடலில் நடத்த பொதுஜன பெரமுனவினர் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தனர். எனினும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் காலி முகத்திடலை கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஆக்கிரமித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு…
The post அரசியல் கட்சிகளால் நாடளாவிய ரீதியில் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல் கட்சிகளால் நாடளாவிய ரீதியில் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
