ஈஸ்டர் தாக்குதல் – முஸ்லிம் இளைஞர்கள் மாத்திரம் ஒன்றுகூடி செய்த வேலையல்ல, பின்னணியில் பாரிய மறைகரம் உள்ளது! – கர்தினால்
4 view
சாதாரண முஸ்லிம் இளைஞர்கள் ஆறேழு பேர் சேர்ந்து நாம் ஏதாவது செய்வோம் என நினைத்துச் செய்ததல்ல இந்தக் குண்டுத் தாக்குதல். சிறந்த ஒருங்கிணைப்புடன் ஆறு இடங்களில் மனிதப் படுகொலைகள் நடந்துள்ளன. இதற்குப் பின்னால் முஸ்லிம் இளைஞர்கள் மாத்திரமல்ல அதற்கும் மேலால் சிக்கலான மறைகரம் இருப்பது எனக்கு புரிந்தது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 3வது வருட நினைவை முன்னிட்டு இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கட்டுவபிட்டிய சாந்த செபஸ்தியன் தேவஸ்தானத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி கட்டுவபிட்டி வீதி, கொழும்பு வீதி, பிரதான வீதி, கிறீன்ஸ் வீதி ஊடாக கூட்ட மேடையை வந்தடைந்தது. சர்வ மதத் தலைவர்களும் கலந்துகொண்ட இக்கண்டனக் கூட்டத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தொடர்ந்து உரையாற்றுகையில், எனக்குப் பின்னால் புகைப்படங்களை ஏந்தியுள்ளவர்களைப் பார்த்தேன். அதில் உள்ளவை மிருகங்களல்ல.…
The post ஈஸ்டர் தாக்குதல் – முஸ்லிம் இளைஞர்கள் மாத்திரம் ஒன்றுகூடி செய்த வேலையல்ல, பின்னணியில் பாரிய மறைகரம் உள்ளது! – கர்தினால் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈஸ்டர் தாக்குதல் – முஸ்லிம் இளைஞர்கள் மாத்திரம் ஒன்றுகூடி செய்த வேலையல்ல, பின்னணியில் பாரிய மறைகரம் உள்ளது! – கர்தினால் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
