வடக்கு மீனவர்களுக்கு தமிழக முதல்வர் உதவ முன்வரவேண்டும்! – அன்னராசா கோரிக்கை
4 view
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்தது போல, கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இந்திய இழுவை மடி தொழிலால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மீனவர்களுக்கும் தமிழக முதலமைச்சர் உதவ முன்வரவேண்டும் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா கோரிக்கை விடுத்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாட்டு முதலமைச்சர், இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதை, வடக்கு கடற்தொழிலாளர்கள் என்ற ரீதியில் அவரது செயற்பாட்டை நாங்கள் வரவேற்கின்றோம். அத்தோடு அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அதேபோல தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும், அத்தோடு அத்தனை சட்ட சபை உறுப்பினர்களுக்கும் வடக்கு கடற்தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் ஒரு அன்பான வேண்டுகோளை விடுக்கின்றோம். தொப்புள் கொடி உறவாக இவ்வாறு நீங்கள் பாதிக்கப்பட்ட எங்களுக்கு உணவு பொருட்களை அனுப்பமுன் வந்து இருக்கிறீர்களோ, அதேபோலத்தான் எங்களது தொப்புள்…
The post வடக்கு மீனவர்களுக்கு தமிழக முதல்வர் உதவ முன்வரவேண்டும்! – அன்னராசா கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு மீனவர்களுக்கு தமிழக முதல்வர் உதவ முன்வரவேண்டும்! – அன்னராசா கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
