இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் வடக்கு ஆளுநர்
13 view
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வருக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக இலங்கை வடக்கு மகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு 123 கோடி ரூபாய் மதிப்பில் உணவு, பால்மா, மருந்து, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கிட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக அரசு இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன் வந்தமைக்கு தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் நிலவக்கூடிய இந்த கஷ்ட காலத்தில் மத்திய அரசு மூலமாக உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன், இந்தியாவிடமிருந்து தற்போது மருத்துவ…
The post இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் வடக்கு ஆளுநர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் வடக்கு ஆளுநர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
