குற்றச் செயல்கள் அதிகரிப்பு: ஈக்வடாரில் மூன்று மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு!
16 view
ஈக்வடாரில் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் மூன்று மேற்கு மாகாணங்களில், அவசர நிலையை ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும். அமைதி மற்றும் ஒழுங்கை அமுல்படுத்த ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குயாஸ், மனாபி மற்றும் எஸ்மரால்டாஸ் ஆகிய மாகாணங்களுக்கு அனுப்பப்படுவார்கள். 4,000 பொலிஸ் அதிகாரிகளும், ஈக்வடாரின் ஆயுதப் படையைச் சேர்ந்த 5,000 துருப்புக்களும் மூன்று மாகாணங்களிலும் நிறுத்தப்படுவார்கள். குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் ஊரடங்கு சட்டம் உள்ளூர் நேரப்படி 23:00 முதல் 05:00 வரை இருக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. லாஸ்ஸோ கடந்த ஆண்டு பதவியேற்ற பிறகு வன்முறையைத் தடுக்க அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவது இது இரண்டாவது முறையாகும். ஈக்வடாரில் கொலைகள் மற்றும் கும்பல் தொடர்பான குற்றங்களில் கூர்மையான அதிகரிப்பு காணப்படுகிறது. 2021இல் லத்தீன் அமெரிக்கா அல்லது கரீபியன் நாடுகளில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட ஈக்வடாரின் கொலை…
The post குற்றச் செயல்கள் அதிகரிப்பு: ஈக்வடாரில் மூன்று மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குற்றச் செயல்கள் அதிகரிப்பு: ஈக்வடாரில் மூன்று மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
