பிரான்ஸ் நாடாளுமன்ற செயலாளர் யாழ்.மாநகர முதல்வருடன் சந்திப்பு!
15 view
பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினரும் பிரஞ் பாராளுமன்ற செயலாளருமாகிய ஜோன்ஸ் பிரான்சுவாவுக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவித்த யாழ். மாநகர முதல்வர், நாங்கள் உங்களிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். ஒன்று தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினைப் பெற்றுதருவதற்கு நீங்கள் துணை நிற்கவேண்டும். இரண்டாவதாக 30 வருட போரின் காரணமாக அழிக்கப்பட்ட எமது பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்கு தேவையான உதவிகளை நீங்கள் வழங்கவேண்டும். அத்துடன் தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் அமைப்புக்கள் தமிழருக்கு நீதியான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி முறையிலான ஆட்சி அதிகாரத்தினை இலங்கை அரசு வழங்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் நிதி உதவிகளை அளிக்கவேண்டும் என்றும் அதற்கான அழுத்தங்களை நீங்கள் பிரயோகிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த பிரஞ் பாராளுமன்ற செயலாளார் ஜோன்ஸ் பிரான்சுவா, தாங்கள் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை…
The post பிரான்ஸ் நாடாளுமன்ற செயலாளர் யாழ்.மாநகர முதல்வருடன் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரான்ஸ் நாடாளுமன்ற செயலாளர் யாழ்.மாநகர முதல்வருடன் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
