இலங்கையை நெருக்கடிகளிலிருந்து மீட்கும் இந்தியா!
5 view
இலங்கை அரசாங்கம், பொருளாதார நெருக்கடி அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையால் மிகமோசமான நிலைமைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. காலிமுகத்திடலில் சுயாதீனமாக ஒன்றிணைந்த குழுவினர் ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டு மூன்றாவது வாரத்தினை கடந்து தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்தத் தொடர்போராட்டத்திற்கு ஆதரவாக நாடாளவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்விதமான போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறையில் பொதுமகன் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அதேநேரம், அனைத்து தொழிற்சங்கங்களும் வீதிக்கு இறங்கி பாரிய போராட்டங்களையும் ஹர்த்தாலையும் முன்னெடுத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்தப்போராட்டங்கள் இன்னமும் தீவிரமடையாலம் என்றும் அத்தொழிற்சங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இவ்விதமான நிலையில் இலங்கை அரசாங்கம் தனது முன்னைய கொள்கையை மாற்றி சர்வதேச நாணய நிதியத்திடம் அவரச மற்றும் நீண்டகால உதவியை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதற்காக, இலங்கையிலிருந்து நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் எம் சிறிவர்தன ஆகியோர் சர்வதேச நாணயநிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா பிரதிப்…
The post இலங்கையை நெருக்கடிகளிலிருந்து மீட்கும் இந்தியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையை நெருக்கடிகளிலிருந்து மீட்கும் இந்தியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
