மட்ரிட் பகிரங்க டென்னிஸ்: ஒசாகா- எம்மா ரடுகானு இரண்டாவது சுற்றுக்கு தகுதி!
4 view
மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டிகளில், நவோமி ஒசாகா மற்றும் எம்மா ரடுகானு ஆகியோர் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், ஜப்பானின் நவோமி ஒசாகா, ரஷ்யாவின் அனஸ்தேசியா பொட்டாபோவாவை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நவோமி ஒசாகா, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் எளிதாக வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், பிரித்தானியாவின் இளம் வீராங்கனையான எம்மா ரடுகானு, செக் குடியரசின் தெரேசா மார்ட்டின்கோவாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், எம்மா ரடுகானு, 7-6, 6-0 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
The post மட்ரிட் பகிரங்க டென்னிஸ்: ஒசாகா- எம்மா ரடுகானு இரண்டாவது சுற்றுக்கு தகுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்ரிட் பகிரங்க டென்னிஸ்: ஒசாகா- எம்மா ரடுகானு இரண்டாவது சுற்றுக்கு தகுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
