அலரிமாளிகைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல்? – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்!

40 view
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்பாகவும் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மைனா கோ கம என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இடத்தில், பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், போராட்டக்காரர்களின் கோஷங்களை முடக்கும் வகையில், அலரிமாளிகையில் ஒலிப்பெருக்கி ஊடாக மிகவும் சத்தமாக பிரித் ஓதப்பட்டு இடையூறு விளைவிக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. அதேநேரம், இங்குள்ள போராட்டக்கார்களுக்கு எதிராக, குறித்த பகுதியின் நடைப்பாதைகளில் பொலிஸார் பஸ்கள் உள்ளிட்ட பொலிஸ் வாகனங்களையும் நிறுத்தியுள்ளனர். எனினும், குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்றுவதற்கு கொள்ளுபிட்டி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர், குறித்த பகுதியில் நிறுதிவைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறுப்படுத்துமாறு கோரியிருந்தனர். எனினும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள…
The post அலரிமாளிகைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல்? – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース