ஆளுங்கட்சிக்கு ‘113’ இல்லையேல் புதிய பிரதமரை நியமிப்பேன் – ஜனாதிபதி
4 view
மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நான் வலியுறுத்தவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்குமானால் அப்பதவியில் அவர் நீடிப்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அவ்வாறு இல்லாவிட்டால் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியை ஒப்படைக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்படும். இது அரசமைப்பிலுள்ள ஏற்பாடு. அதற்கு கட்டுப்பட்டாக வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்றிரவு(வியாழக்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் ஆரம்பத்தில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. அத்தியாவசியபொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என மொட்டு கட்சி எம்.பிக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விரு காரணங்களே, மக்கள் மத்தியில் அரச எதிர்ப்பு அலை கோலோச்ச பிரதான காரணங்களாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்பின்னர் இடைக்கால அரசு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது சம்பந்தமான யோசனையை இராஜாங்க அமைச்சர்…
The post ஆளுங்கட்சிக்கு ‘113’ இல்லையேல் புதிய பிரதமரை நியமிப்பேன் – ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆளுங்கட்சிக்கு ‘113’ இல்லையேல் புதிய பிரதமரை நியமிப்பேன் – ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
