மலேஷியா தமிழ் நபரிற்கு சிங்கப்பூரில் மரண தண்டனை!
4 view
மலேஷியாவை சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம் என்பவரிற்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கிரகித்தல் குறைபாடு உடைய இவர் மீது 12 வருடங்களிற்கு முன்பு, அதாவது 2010ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கின் காரணமாக இந்த தண்டனை நிறைவேற்றம் அரங்கேறியுள்ளது. நேற்றைய தினம் சிங்கப்பூரின் சங்கீ சிறைச்சாலையில் வைத்து மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நாகேந்திரனின் சகோதரர் நவின் குமார் குறிப்பிடும் போது, நாகேந்திரனின் உடல் இறுதிக் கிரியைகளிற்காக மலேசியா அனுப்பப்படவுள்ளதாகக் கூறியுள்ளார். 34வயதான இவரின் தண்டனையை ரத்து செய்யுமாறு இறுதிக்கட்டத்தில் இவரது தாயின் வேண்டுகோளை சிங்கப்பூர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்து தண்டனையை நிறைவேற்றியுள்ளது. நாகேந்திரன், நீதிமன்ற அறையில் இருந்து அவரது குடும்ப உறுப்பினர்களுடன் கைகோர்க்க நீதிமன்றம் அனுமதித்தது. இந்தநிலையில் துாக்கிலிடப்படுவதற்கு முன்னர் நாகேந்திரன் தமக்கு விருப்பமான ஆடையை அணிந்து புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் 42.7g ஹேரோயின் போதைப்பொருள் தொடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவர்…
The post மலேஷியா தமிழ் நபரிற்கு சிங்கப்பூரில் மரண தண்டனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலேஷியா தமிழ் நபரிற்கு சிங்கப்பூரில் மரண தண்டனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
