பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பது சந்தேகமே! வலி.தெற்கு தவிசாளர் ஆரூடம்
12 view
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாமல் இந்த பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பது என்பது கேள்விக்குறியே என வலி,தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.தர்ஷன் தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில், சிங்கள மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் வேளை அச்சிங்கள மக்கள் தமிழர்களின் பிரச்சனைகள் பற்றியதான மனநிலை எந்தளவிற்கு மாறியுள்ளது என்பது தெரியவில்லை. கடந்த காலங்களில் தமிழர்கள் கொல்லப்பட்டு துன்புறுத்தப்பட்ட போது பாற்சோறு பொங்கி கொண்டாடிய மக்கள், தற்போது பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் தமிழர்களின் பிரச்சனைகளை சிங்கள மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம் . தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாமல் இந்த பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பது என்பது கேள்விக்குறியாக இருக்கும் . வடக்கு,கிழக்கு பிரதேசத்தில் இருக்கிற மக்கள் பெரும்பான்மையாக புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்றார்கள். இப்புலம்பெயர் மக்களின் முதலீடு…
The post பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பது சந்தேகமே! வலி.தெற்கு தவிசாளர் ஆரூடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பது சந்தேகமே! வலி.தெற்கு தவிசாளர் ஆரூடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
