பிரமாண்ட இரவு நேர இராணுவ அணிவகுப்பில் அணு ஆயுதங்களை அதிகரிக்க போவதாக கிம் சபதம்!
14 view
இராணுவத்தை நிறுவியதைக் குறிக்கும் வகையில், பிரமாண்ட இரவு நேர இராணுவ அணிவகுப்பை வடகொரியா நடத்தியுள்ளது. அணிவகுப்பு உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு தொடங்கியது. இந்த இரவு நேர அணிவகுப்பில் வடக்கின் மிகப்பெரிய மற்றும் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் Hwasong-17 காட்சிப்படுத்தப்பட்டதாக மாநில ஊடகங்கள் தெரிவித்தன. தலைநகரின் முக்கிய கிம் இல் சுங் சதுக்கம் பரபரப்பாக இருந்ததாகவும், வீதிகள் மூடப்பட்டதாகவும், இரவு நேரத்தில் நகருக்கு மேலே உள்ள வான்பரப்பில் ஒளிரும் பொருட்கள் காணப்பட்டதாகவும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனமொன்று குறிப்பிட்டுள்ளது. சுமார் 90 நிமிடங்களுக்குப் பிறகு வானவேடிக்கையுடன் அணிவகுப்பு நிறைவடைந்தது. கிம் இல் சுங் சதுக்கத்தின் குறுக்கே ஏராளமான படைவீரர்கள் அணிவகுத்துச் செல்வதையும், சிலர் போர்ச் சீருடைகளில் அணிவகுத்துச் செல்வதையும், மற்றவர்கள் குதிரைகளில் ஏறிச் செல்வதையும், கிம் வெள்ளை சம்பிரதாய கோட் அணிந்து படை வீரர்களுக்கு உற்சாகமாக கை அசைப்பதையும் அரசு ஊடகங்கள்…
The post பிரமாண்ட இரவு நேர இராணுவ அணிவகுப்பில் அணு ஆயுதங்களை அதிகரிக்க போவதாக கிம் சபதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரமாண்ட இரவு நேர இராணுவ அணிவகுப்பில் அணு ஆயுதங்களை அதிகரிக்க போவதாக கிம் சபதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
