உக்ரைனுக்கு எங்கள் ஆதரவு தொடரும்: ஜெலன்ஸ்கியை சந்தித்த அமெரிக்க அமைச்சர்கள்
15 view
கீவ், ஏப் 26 ரஷியாவின் தீவிர தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் தலைநகர் கீவில் அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவஅமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 2 மாதங்களை கடந்தும் நீடிக்கிறது. 21-ம் நூற்றாண்டின் வரலாற்று ஏடுகளில் கறுப்பு அத்தியாயமாக தொடரும் இந்த போருக்கு முடிவுரை எழுத இன்னும் முடியவில்லை. உக்ரைனின் வளமான பகுதிகளும், வானுயர்ந்த கட்டிடங்களும் நிர்மூலமாகி வருகின்றன. அதில் வசித்து வரும் மக்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். சொந்த மண்ணிலேயே காலம் கடத்த விரும்புபவர்கள் ரஷியாவின் ஆயுதங்களுக்கு உயிரை பறிகொடுக்க வேண்டியிருக்கிறது. அதேநேரம் உக்ரைனும் எளிதில் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. தங்களால் முடிந்த அளவுக்கு ரஷியாவை தடுத்து நிறுத்த போராடி வருகிறது. இதற்கு பலனும் கிடைத்து வருகிறது. தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில் ரஷியாவின் தாக்குதலை உக்ரைன் முறியடித்துள்ளதால், கிழக்கு உக்ரைன் மீது கவனம்…
The post உக்ரைனுக்கு எங்கள் ஆதரவு தொடரும்: ஜெலன்ஸ்கியை சந்தித்த அமெரிக்க அமைச்சர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உக்ரைனுக்கு எங்கள் ஆதரவு தொடரும்: ஜெலன்ஸ்கியை சந்தித்த அமெரிக்க அமைச்சர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
