21வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-எதிர்க்கட்சி கோரிக்கை!
5 view
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரன்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இன்று நாடு முகம் கொடுக்கின்ற சவால்களை வெற்றி கொள்வதில் சட்டமன்றத்தின் பொறுப்புகளானது தட்டிக் கழித்துவிட்டு முன்னேற முடியுமான பொறுப்புகள் அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியானது மென்மேலும் நினைவூட்டுகிறது.அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது மக்கள் அபிப்பிராயத்தை தட்டிக் கழித்துவிட்டு செயற்படுவது யதார்த்தமானதல்ல என்பதை அனைவரும் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். மதிப்புக்குரிய மகாநாயக்க தேரர்கள்,பேராயர் காதினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் மற்றும் சர்வமத தலைவர்களின் வேண்டுகோளானது அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து பிரச்சினைகளுக்கான முடிவுகளை காணலாம் என்பதாகும்.இந்த ஆலோசனைக்கு ஐக்கிய மக்கள் சக்தியானது எந்தவிதமான தயக்கமும் இன்றி பூரண ஒத்துழைப்பை வழங்கும். இங்கு நாட்டு மக்களின் வேண்டுகோளுக்கு அமைய அரசியல் மாற்றம் இடம்பெறுவது அத்தியாவசியமானது என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்கிறோம். முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாப் பிரேரணை தொடர்பான செயற்பாடுகள் அவ்வாறே முன்னெடுத்துச் செல்ல…
The post 21வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-எதிர்க்கட்சி கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 21வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-எதிர்க்கட்சி கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
