இலங்கை மக்களின் நிலை மேலும் திண்டாட்டம்! மின் கட்டணமும் அதிகரிப்பு
14 view
மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் அது சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் நாளாந்த இழப்பு சுமார் 500 பில்லியன் ரூபாவாகும் என தெரிவித்த அவர், இப்போது நாம் செய்ய வேண்டியது, உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதுதான் என தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள் விலை திருத்தம் எதிர்காலத்தில் விலை சூத்திரத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
The post இலங்கை மக்களின் நிலை மேலும் திண்டாட்டம்! மின் கட்டணமும் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை மக்களின் நிலை மேலும் திண்டாட்டம்! மின் கட்டணமும் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
