இன்றைய வானிலை நிலவரம் தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பு
15 view
மத்திய மாகாணம் உள்ளிட்ட சில மாகாணங்களில் இன்று மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவதான அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால்…
The post இன்றைய வானிலை நிலவரம் தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்றைய வானிலை நிலவரம் தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
