ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடம்
25 view
ஸ்டாக்ஹோம்,ஏப் 25 உலக நாடுகளின் ராணுவ செலவு குறித்த ஆய்வு அறிக்கையை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2021-ஆம் ஆண்டில் உலக நாடுகளின் ராணுவச் செலவு இதுவரை இல்லாத அளவில் 2.1 டிரில்லியன் டாலர்களை எட்டியது. 2021ம் ஆண்டில் உலகிலேயே அதிக அளவில் ராணுவத்திற்கு செலவு செய்யும் முதல் 5 நாடுகளாக அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் மற்றும் ரஷியா ஆகியவை உள்ளன. இந்த 5 நாடுகளின் ராணுவ செலவு, உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவில் 62 சதவீதமாக உள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, 2021ல் ராணுவத்திற்காக 76.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்துள்ளது. முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா 801 பில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளது. சீனா 293 பில்லியன் டாலர்கள், பிரிட்டன் 68.4 பில்லியன் டாலர்கள், ரஷியா 65.9 பில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளன. கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார…
The post ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
