இம்ரான்கான் இல்லாத பாகிஸ்தான்!

4 view
ஏ.ஆர்.ஏ.பரீல் 2018 ஆம் ஆண்டு பாகிஸ்­தானின் பிர­த­ம­ராக தெரிவு செய்­யப்­பட்டு பதவி வகித்த இம்ரான்கான் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பில் தோல்­வியைத் தழு­வி­ய­தை­ய­டுத்து பிர­தமர் பத­வி­யி­லி­ருந்தும் வெளி­யேற்­றப்­பட்­டுள்ளார். நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையின் மூலம் பத­வி­யி­லி­ருந்தும் வெளி­யேற்­றப்­பட்ட பாகிஸ்­தானின் முதல் பிர­தமர் இவர் ஆவார். எதிர்க்­கட்­சி­யி­னரின் இம்­ரான்­கா­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கடந்த 9ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்­டது. பாகிஸ்­தானின் அர­சியல் வர­லாற்றில் எந்­த­வொரு பிர­த­ம­ருக்கும் தனது ஐந்து வருட பத­விக்­கா­லத்தை பூர்த்தி செய்து கொள்­வ­தற்கு வாய்ப்பு கிடைக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இதற்­கான காரணம் அர­சியல் சூழ்ச்சி மற்றும் இரா­ணுவ புரட்சி என வெளி­நாட்டு ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன. பாகிஸ்தான் பாரா­ளு­மன்றம் 342 உறுப்­பி­னர்­களைக் கொண்­ட­தாகும். இம்­ரான்­கா­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் 174 வாக்­கு­களால் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. பாகிஸ்­தானின் எதிர்க்­கட்சி கூட்­டணி ஒன்­றி­ணைந்து இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை முன்­வைத்­தி­ருந்­தது. இம்­ரான்­கா­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை வாக்­கெ­டுப்­புக்­கு­வி­டப்­ப­டு­வ­தற்கு இருந்த நிலையில் அவர் ஒரு வாரத்­துக்­கு­முன்பு பாரா­ளு­மன்­றத்தைக்…
The post இம்ரான்கான் இல்லாத பாகிஸ்தான்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース