தடைகளை மீறி காலிமுகத்திடலை வந்தடைந்த பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி – 17ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

4 view
கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 17ஆவது நாளாகவும் தொடர்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணி நேற்று இரவு கொழும்பு காலி முகத்திடலை வந்தடைந்தது. கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் அங்கிருந்து கொழும்பு காலி முகத்திடலை சென்றடைவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் காலி முகத்திடலுக்கு செல்லும் சில உப வீதிகள் நேற்று காலை முதல் மூடப்பட்டிருந்தன. குறித்த பகுதிகளில் அதிகளவிலான பொலிஸாரும் இராணுவத்தினரும் வீதித்தடையினை ஏற்படுத்தி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி, தொழிநுட்ப சந்தியின் ஊடாக பஞ்சிக்காவத்தை சந்தியை கடந்து அங்கிருந்து பொரளை விஜயராம மாவத்தையை அடைந்தது. அதன்பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக…
The post தடைகளை மீறி காலிமுகத்திடலை வந்தடைந்த பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி – 17ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース