இரண்டாவது முறையாக பிரான்ஸ் ஜனாதிபதியாக மேக்ரான் தெரிவு
4 view
பாரீஸ், ஏப் 25 பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வரும் இமானுவேல் மேக்ரானின் பதவி காலம் முடிவடைந்ததையடுத்து 12-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு 2 சுற்று தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நதாலி ஆர்தாட், நிக்கோலஸ் டூபோன்ட், ஆன் ஹிடால்கோ, யானிக்ஜடோட், ஜீன்லஸ்ஸல், மரைன் லி பென் உள்பட 12 பேர் களமிறங்கினர். பிரான்சின் அரசியலமைப்பு சட்டப்படி 2 சுற்று தேர்தல் மூலம் அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதன்படி பிரான்சில் முதல் சுற்று அதிபர் தேர்தல் கடந்த 10-ம் திகதி நடந்தது. 4.90 கோடி வாக்காளர்களுக்காக பல்லாயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். இமானுவேல் மேக்ரானுக்கும், வலதுசாரி வேட்பாளரும், பெண் வக்கீலுமான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி…
The post இரண்டாவது முறையாக பிரான்ஸ் ஜனாதிபதியாக மேக்ரான் தெரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரண்டாவது முறையாக பிரான்ஸ் ஜனாதிபதியாக மேக்ரான் தெரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
