கேலிக்கூத்தான வீதித் தடைகள் மூலம் போராட்டங்களை தடுக்க முடியாது: நிரந்தர வீதித் தடைகளை அகற்றவும் – சஜித்
4 view
மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீதித் தடைகளை அகற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கம், தற்போது அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக மக்களுக்கு எதிராக அழுத்தங்களையும் ஒடுக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், கொழும்பு கோட்டை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வீதிகளை மறித்து நிரந்தர வீதித் தடைகளை இட்டுள்ளமை அதன் ஒரு செயற்பாடு என சுட்டிக்காட்டியுள்ளார். லோட்டஸ் வீதி முற்றாக மூடப்பட்டுள்ளமையினால் வாகனங்கள் கொழும்புக்குள் பிரவேசிப்பதற்கு வேறு பாதைகளை பயன்படுத்த வேண்டியேற்பட்டுள்ளதாகவும் மக்களின் இயல்பு வாழ்க்கை நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் பல போராட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்படுவதால் அரசாங்கம் அச்சத்தில் இருப்பதுடன் இந்த கேலிக்கூத்தான வீதித் தடைகள் மூலம் மக்களின் போராட்டங்களை தடுக்கமுடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
The post கேலிக்கூத்தான வீதித் தடைகள் மூலம் போராட்டங்களை தடுக்க முடியாது: நிரந்தர வீதித் தடைகளை அகற்றவும் – சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கேலிக்கூத்தான வீதித் தடைகள் மூலம் போராட்டங்களை தடுக்க முடியாது: நிரந்தர வீதித் தடைகளை அகற்றவும் – சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
