அடுத்த மூன்று மாதங்கள் முக்கியமானதாக இருக்கும்; உதவி கோரும் சுகாதார அமைச்சு
4 view
நாட்டின் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது இந்தநிலையில் எதிர்வரும் 90 நாட்களில் புதிய இருப்புக்கள் வரும் வரை இந்த பற்றாக்குறை நிலையை நிர்வகிப்பதற்கு உதவுமாறு இலங்கையின் சுகாதார அமைச்சு, மருத்துவ சங்கங்கள் மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள நிபுணர்களின் உதவியை நாடியுள்ளது. அந்த வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், மருத்துவ நிபுணர்கள் சங்கம், தாதியர் சங்கங்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உள்ளிட்ட சுகாதார துறை தொழிற்சங்கங்களின் உதவியை அமைச்சு நாடியுள்ளதாக புதிய சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலை நிர்வகிக்க இந்த தொழிற்சங்கங்கள் மற்றும் சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய நிபுணர்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது. இது அடுத்த 90 நாட்களுக்கு முக்கியமானதாக இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய கடன் வரியின் கீழ் சில அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் வருகையை அரசாங்கம்…
The post அடுத்த மூன்று மாதங்கள் முக்கியமானதாக இருக்கும்; உதவி கோரும் சுகாதார அமைச்சு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடுத்த மூன்று மாதங்கள் முக்கியமானதாக இருக்கும்; உதவி கோரும் சுகாதார அமைச்சு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
