அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம்! – மஹிந்த பரபரப்புக் கருத்து
4 view
இலங்கை அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தான் பொறுப்பு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்க வேண்டிய நிலைமைக்குத் தான் காரணம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ச அரசு கூண்டோடு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. அதனிடையே பிரதமர் மஹிந்த ராஜபக்ச உடன் பதவி விலகி சர்வகட்சி அடங்கிய இடைக்கால அரசு அமைய வழிவிட வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும எம்.பியின் கோரிக்கையும் ஆளும் கட்சிக்குள் பெரும் புயலாக மாறியுள்ளது. இந்நிலையில், பிரதமர் பதவியில் தான் தொடர்ந்து நீடிப்பார் என்றும், இடைக்கால அரசு அமைந்தால்கூட அதுவும் தனது தலைமையிலேயே மலரும் என்றும் நேற்றுமுன்தினம் திட்டவட்டமாக அறிவித்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச,…
The post அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம்! – மஹிந்த பரபரப்புக் கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம்! – மஹிந்த பரபரப்புக் கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
