தமிழ் மக்களுக்கு ஆட்சி மாற்றம் அவசியமில்லை, அடிப்படை மாற்றமே தேவை; அமெரிக்க தூதுவரிடம் யாழ் சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டு
11 view
தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்தை கேட்கவில்லை, அடிப்படை மாற்றத்தை தான் கோருகின்றார்கள் என அமெரிக்கத்தூதுவர் ஜூலி சுங்கிடம், யாழ்.சிவில் சமூக பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழுக்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கிற்கும், யாழ் மாவட்டத்திலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்று மாலை இடம்பெற்றது இச்சந்திப்பு தொடர்பில் அரசியில் ஆய்வாளர் நிலாந்தன் சமூகம் ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளும் அமெரிக்க தூதுவருக்கு எடுத்து சொல்லப்பட்டது. கொழும்பில் பொருளாதார நெருக்கடிகள், அரசியல் நெருக்கடியாக மாற்றமடைந்ததன் விளைவாக அரசியல் ரீதியான பதற்றத் தன்மையொன்று நிலவுகின்றது. ஆனால் வடக்கு – கிழக்கில் அவ்வாறான பதற்றங்கள் இல்லை. தமிழ் மக்கள் ஏன் பெருமெடுப்பில் சிங்கள மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் பங்கெடுப்பது இல்லை என்ற கேள்வியை தூதுவர் கேட்டார். தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்தை கேட்கவில்லை. அடிப்படை மாற்றத்தை…
The post தமிழ் மக்களுக்கு ஆட்சி மாற்றம் அவசியமில்லை, அடிப்படை மாற்றமே தேவை; அமெரிக்க தூதுவரிடம் யாழ் சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்களுக்கு ஆட்சி மாற்றம் அவசியமில்லை, அடிப்படை மாற்றமே தேவை; அமெரிக்க தூதுவரிடம் யாழ் சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
