திங்கட்கிழமை அதிபர், ஆசிரியர் சுகயீன லீவு போராட்டம்: ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு
29 view
கொழும்பு, ஏப் 24 இலங்கையிலுள்ள அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளைய தினம் திங்கட்கிழமை பாடசாலைக்கு சமூகமளிக்கமாட்டார்கள். அன்றைய தினம் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் அக்கறையுடன் செயற்படுமாறும், இன்றைய பொருளாதார நெருக்கடியுள்ள சூழலில் வீணான சிரமங்களைத் தவிர்க்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், வடமாகாண கல்வித் திணைக்களத்தால் திங்கட்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த இடைநிலை பிரிவுக்கான பரீட்சைகளை வேறொரு தினத்துக்கு ஒத்திவைக்குமாறு கோரியுள்ளோம். எரிபொருள் பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் மாற்றீடான எமது முன்மொழிவுகளை கல்வியமைச்சு நிராகரித்தமையின் விளைவாகவே நாளைய தினம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களால் சுகயீன லீவுப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தூர இடங்களிலிருந்து வரும் மாணவர்களின் வரவு மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருட்களின் தட்டுப்பாடும், விலையேற்றமும், குடும்ப பொருளாதார நிலையும் மாணவர்களின் வரவினையும் கணிசமாக பாதித்துள்ளன. அத்துடன் தூர பிரதேசங்களிற்கு சென்று கடமையாற்றும் அதிபர்கள்…
The post திங்கட்கிழமை அதிபர், ஆசிரியர் சுகயீன லீவு போராட்டம்: ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திங்கட்கிழமை அதிபர், ஆசிரியர் சுகயீன லீவு போராட்டம்: ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
