பொருளாதார நெருக்கடி: தமிழ்த் தரப்பு என்ன செய்யலாம்? நிலாந்தன்.
13 view
நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளாகவும் யாப்பு நெருக்கடிகளாகவும் மாறியுள்ளன. தென்னிலங்கையில் ஏற்பத்துள்ள அரசியல் ஸ்திரமின்மை தொடர்பாக தமிழ்த் தரப்பு என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? இது விடயத்தில் தமிழ்த் தரப்பு முடிவெடுப்பதாக இருந்தால் முதலில் தென்னி லங்கையில் இடம்பெறும் கொந்தளிப்புகள் தொடர்பாக ஒரு சரியான படத்தை பெறவேண்டும். தென்னிலங்கையில் நான்கு பரப்புக்களை நோக்கி தமிழ் தரப்பு கவனத்தை குவிக்க வேண்டி இருக்கிறது. முதலாவது நாடாளுமன்றம். இரண்டாவது காலிமுகத்திடல்.மூன்றாவது பௌத்த மகா சங்கங்கள்.நாலாவது அரசாங்கத்துக்கு உதவ முற்படும் வெளித்தரப்புக்கள். முதலில் நாடாளுமன்றம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அரசாங்கமும் தோற்றுவிட்டது, எதிர்க்கட்சிகளும் தோற்று விட்டன. அதன் விளைவாக அரசற்ற நிலை ஒன்று தோன்றியிருக்கிறது. யாப்பைப் பொறுத்தவரை ஜனாதிபதி தொடர்ந்தும் பலமாக இருக்கிறார். அவரை அகற்ற எதிர்க்கட்சிகளால் முடியவில்லை. யாபை மீறிச் சிந்திக்க எதிர்க் கட்சிகள் தயாராக இல்லை. மக்கள் போராட்டங்கள் அவ்வாறு யாப்பை மீறத்தேவையான துணிச்சலை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குகின்றன. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு…
The post பொருளாதார நெருக்கடி: தமிழ்த் தரப்பு என்ன செய்யலாம்? நிலாந்தன். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொருளாதார நெருக்கடி: தமிழ்த் தரப்பு என்ன செய்யலாம்? நிலாந்தன். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
