இலங்கை விவகாரத்தினை வைத்து காய்களை நகர்த்தும் இந்தியா மற்றும் சீனா?
5 view
இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர்கள் நிதி உதவியை வழங்க இந்தியா தயாராக உள்ளது. அத்துடன் இலங்கை விடயத்தில் இந்தியா அண்மைய ஆண்டுகளில் சீனாவிடம் இழந்த இடத்தை புதுடில்லி மீண்டும் பெற முயற்சிக்கிறது என ரொய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. 1948 சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, அதன் முதல் கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலையில் இருக்கும் இலங்கை, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் உணவு, எரிசக்தி உட்பட நிதிக்கடனையும் கோரி வருகிறது. ஆசிய ஜாம்பவான்களாக இருக்கும் சீனாவும், இந்தியாவும் ஏற்கனவே பில்லியன் கணக்கான டொலர்களை நிதி உதவியாக வழங்கியுள்ளனர். இந்நிலையில், ‘நாங்கள் நிச்சயமாக அவர்களுக்கு உதவ விரும்புகிறோம், மேலும் அதிக இடமாற்று வரிகள் மற்றும் கடன்களை வழங்க தயாராக இருக்கிறோம்’ என இலங்கையுடனான பல்வேறு கலந்துரையாடல்களை அறிந்த இந்திய வட்டாரம் தெரிவித்துள்ளது. புதுடில்லியில் உள்ள ஒரு மூத்த அரசாங்க அதிகாரி, இலங்கை கடனை செலுத்த முடியாது…
The post இலங்கை விவகாரத்தினை வைத்து காய்களை நகர்த்தும் இந்தியா மற்றும் சீனா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை விவகாரத்தினை வைத்து காய்களை நகர்த்தும் இந்தியா மற்றும் சீனா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
