வடக்கின் பெரும் போர்: சென்ஜோன்ஸ் கல்லூரி 99 ஓட்டங்களால் வெற்றி

4 view
யாழ்ப்பாணம், ஏப் 23 வடக்கின் பெரும் போர் எனப்படும் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குமிடையிலான 115ஆவது துடுப்பாட்டப்போட்டியில், சென்ஜோன்ஸ் கல்லூரி 99 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி 84.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சென்ஜோன்ஸ் கல்லூரி சார்பில் கரிசன் 41 ஓட்டங்களையும் அணித்தலைவர் அபிசேக் 40 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பில் விதுசன் மற்றும் கவிதர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தனது முதல் இனிங்சில் 45 ஒவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை பெற்றது. மத்திய கல்லூரி சார்பில் சாரங்கன் 41 ஓட்டங்களையும்,…
The post வடக்கின் பெரும் போர்: சென்ஜோன்ஸ் கல்லூரி 99 ஓட்டங்களால் வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース